மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தின நிகழ்வுகள்.















மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் மகளிர் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின்  வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளின் வரிசையில் மூன்றாவது  நிகழ்வாக மகளிருக்கான "மனைப் பொருளாதார முகாமைத்துவ செயலமர்வானது"   (2024.03.09)  பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் வளவாளர்களாக திரு தங்கவேல் சக்திவேல் (முதன்மை பயிற்றுவிப்பாளர், நிபுணத்துவ ஆலோசகர்  மற்றும் திருமதி சக்தீஸ்வரி சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு செயலமர்வினை சிறப்பாகவும் காத்திரமாகவும் நடாத்தியிருந்தனர்.

இந்த செயலமர்வில் பிரதேச செயலக பிரிவிலிருந்து திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் தெரிவு செய்யப்பட்ட 35 பயனாளிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வின் மூலம் தாம் நல்ல ஆலோசனைகளையும் சிறந்த அனுபவத்தையும் பெற்றுக் கொண்டதாக பயனாளிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .