உள்நாட்டு, வெளிநாட்டு விரோதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்களை சார்ந்திருக்கிறது-ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 


இலங்கையில் பொருளாதார உரிமைகள் மீறப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயார். செங்கடலில் இலங்கையின் பொருளாதார உரிமைகளுக்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படும் பட்சத்தில், அதற்கு எதிரான செயற்பாடுகளை இலங்கை முன்னெடுக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

திருகோணமலை சீனக்குடா விமானப்படை தளத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இலங்கை விமானப்படை கெடட் அதிகாரிகளுக்கு அதிகாரவாணை அளிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்நாட்டு, வெளிநாட்டு விரோதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்களை சார்ந்திருக்கிறது. இன்று நமது நாட்டின் பொருளாதாரம், சமூக கட்டமைப்பு, அரசியல் முறைமை சரிவிலிருந்து மீண்டு வருகின்றன. கடந்த காலத்திற்கு மீண்டும் செல்ல முடியாது. எனவே நாம் இங்கிருந்து முன்னேற வேண்டும். அதற்கு, நாட்டில் மிகப்பெரிய அளவில் நவீனமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.