ரஷ்யாவில் இடம் பெற்ற தாக்குதல் சம்பந்தமாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிவித்திருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனவப் போல் ரஷ்யா செயற்பட்டுள்ளது
நாட்டில் இவ்வாறான குண்டு வெடிப்புகள் நடக்காமல் தடுக்க வேண்டுமானால் வரவு செலவுத் திட்டத்தில் அதிகமான நிதிகள் ஒதுக்கப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது-
ராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தன்
இலங்கையில் ஈஸ்டர் படுகொலை போன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறாமல் இருக்க நாம் எமது சமூகத்தை எவ்வாறு கையாள போகின்றோம் எதிர்காலத்தில் இதனை எவ்வாறு தடுப்பது தொடர்ந்தும் அமைதியான சூழலை தக்க வைப்பது இந்த சவால்களை எவ்வாறு எதிர் கொள்வது என்று நாம் சிந்திக்காமல் இருக்க முடியாது அந்த வலியையும் வேதனையும் தான் நாம் ஆரம்பத்தில் இந்த புத்தகத்தில் சொல்லி இருக்கின் றோம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் படுகொலை புத்தகம் என்பது ஒரு நல்லிணக் கமாக இருந்தால் இது ஒரு மத பிரிவினரை மாத்திரம் அல்ல கிழக்கு மாகாணத் தில் உள்ள சகல மதங்களும் யாரும் பெரிதென்று தங்களை மார்பு தட்ட கூடாது எந்த மதமும் தங்களை பெரிதாக காட்டிக் கொள்ளக் கூடாது என்பதுதான் எனது கருத்து
தற்போது நாம் எதிர்கொள்ளும் சவால்களை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. சேனல் 4 வெளிநாட்டு ஊடகம் சில அரசியல்வாதிகள் எங்களை நோக்கி கை காட்டினார்கள் சாதாரண மத பிரிவினர் இவ்வாறோரு பெரிய தாக்குதலை எவ்வாறு நடத்தினார்கள் என்ற சாத்தியத்தை என்ற பலரது கேள்விக்கு இந்தப் புத்தகம் பதில் கூறுகின்றது இந்தக் குண்டு வெடிப்புக்கு பின்னால் உள்ள சக்தி என்ன நோக்கம் என்ன அவர்களின் கொள்கை இந்த புத்தகம் வெளிக் கொண்டு வருகின்றது எமது நாட்டின் மக்களின் நிலையான சமாதானத்தோடு பொருளாதாரத்திற்காக பாடுபடுகின்ற மக்கள் என்ற அடிப்படையில் ஏனைய அரசியல் கட்சிகள் போன்று நாம் சாதாரணமாக சிந்தித்து விட முடியாது இந்த மக்களை வழிநடத்து கின்ற அரசாங்கமாகவே நாம் சிந்திக்க வேண்டியுள்ளது .
எமது மண்ணிலே எங்களது கண்ணுக்கு முன்னால் குழந்தைகள் எரிந்து போனார்கள் இவ்வாறான ஒரு சம்பவங்கள் இனிமேல் இடம்பெற இருக்காமல் இருக்க நாம் அரசாங்க என்ற ரீதியிலே சிந்திக்க வேண்டியுள்ளது
மனிதனாக சிந்திக்க முடியாது இவ்வாறான சவால்களை எவ்வாறு முறியடிப்பது நேற்று இந்தியாவிலேயே ஐஎஸ் ஐஎஸ் தலைவரே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எல்லாரும் ஒன்றுபட்டு செயல் பட்டால் தான் இவ்வாறான சம்பவங்களை தடுக்க முடியும் என நான் நினைக்கின்றேன் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படு கின்றவர்கள் என்ற ரீதியில் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டிய தேவையில் நாங்களும் இருக்கின்றோம் என மட்டக்களப்பில் இடம்பெற்ற ஈஸ்டர் படுகொலை புத்தக வெளியீடின் போது ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.