வி. பத்மசிறி
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டின் தொடக்க விழாவினை சிறப்பிக்குமுகமாக இறைபணியின் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவா னந்தர் தலைமையில் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. 30/03/2024 சனிக்கிழமை புளியந்தீவு வாவிக்கரை வீதி 02 இல் அமையப் பெற்றுள்ள சுவாமி விவேகானந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிலையம் (VIkAS) அடிக்கல் நாட்டு விழாவும்.அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலை 3.00மணி தொடக்கம் 5 30 மணி வரை சுவாமி விபுலானந்தர் மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ள விவேகானந்தா மனித வள மேம்பாட்டு நிலையத்தில் கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதுடன் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்லடிப்பாலத்தடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பீடம் அடங்கலாக 25.05 அடி நீளமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திரை நீக்கமும் அதனைத் தொடர்ந்து பொது விழாவும் இடம் பெறவுள்ளது. இந்நிகழ்வுகளில் இந்தியா வேலூர் மாவட்ட உலகளாவிய ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடங்கள் துணைச் செயலாளர் ஸ்ரீமத் சுவாமி போதசாரானந்தஜி மகராஜ் கலந்து சிறப்பிக்க உள்ளத்துடன் அரசியல் பிரமுகர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள திணைக்கள உயர் அதிகாரிகள் ஊர்ப் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது