மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை-மனிதநேயக் காப்பகத்தின் பாராட்டும், வரவேற்பும்.











மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேச மனிதநேயக் காப்பகத்தின் ஏற்பாட்டில்   இந்தியா - தமிழ்நாடு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பட்டிமன்றங்கள் நிகழ்த்திய கதிரவன் பட்டிமன்ற பேரவையினரை வரவேற்றுப் பாராட்டும் நிகழ்வு மிகச்சிறப்பாக இடம் பெற்றது (22.03.2024)

மனிதநேய காப்பகத்தின் உபதலைவி திருமதி.பிறேமா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு மனிதநேய காப்பகத்தின் இணைப்பாளர் திரு.த. வசந்தராஜா அவர்கள் பிரதம விருந்தினராக பங்குபற்றியிருந்தார்.

சிறப்பு  விருந்தினர்களாக முன்னாள் உபஅதிபர் திரு செ.முருகுப்பிள்ளை , முன்னாள் ஊர்போடியார் ஆசிரியர் கோ. சடாட்சரசிவம் மற்றும் மனிதநேய காப்பக பிரமுகர்கள், மாதர் சங்கத்தினர் பங்குபற்றியிருந்தனர்.

நிகழ்வில் கதிரவன் பட்டிமன்ற பேரவையினர் வரவேற்கப்பட்டு பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.