பண பலத்தை வைத்து வென்று விடலாம் என்று நினைக்கின்றனர் - ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

 


ஜனாதிபதி தலைமையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானங்கள் பற்றி எதிர்வரும் நாட்களில் ஆக்கபூர்வ மான கலந்துரையாடல்  முன்னெடுக்கப்பட உள்ளது  ஆளும் அரசாங்கத்தின் கட்சி ஒரு சரியான தீர்மான த்தை எடுப்போம் எதிர்க்கட்சியினர்  தற்போது உள்ள அரசியல் சூழலை பயன் படுத்தி தமது இருப்பினை தக்க வைப்பதற்காக பாராளுமன்றத் தேர்தலை முன்னுக்கு வைக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர் ஆளும் கட்சிக்குள் இருந்து சிறு பிரிவினர் பாராளுமன்றத் தேர்தலை தான் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர் இவர்களு க்கு எதிராக கணக்காய்வு அறிக்கை கள் முன்னெடுக்கப்பட வேண்டும் இவர்கள் பண பலத்தை வைத்து வென்று விடலாம் என்று நினைக்கின்றனர் ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்
இரண்டு தேர்தல்களையும் இவ்வருடத்தில் வைக்க வேண்டுமானால் அதிக நிதி தேவைப்படும் அது தற்போதைக்கு சாத்தியமா
நாடு தற்போது வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தில் எழுச்சி கண்டு வருகின்றது. நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாண்டு பொருத்தமான தேர்தல் ஜனாதிபதி  தான் எனவே பாராளுமன்ற  காலத்தின் முடிவு பின்னர் அதை நடத்துவது தான் முறை, காலம் முடிவடைந்த தேர்தல்கள் இன்னும் நடைபெறாமல் இருக்கின்றன அரசியல் லாபங்களுக்காக முடிவு எடுக்கின்ற அவர்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
 ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்  மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்