அம்பாறை திருக்கோவில் தாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் "வெற்றிக்கான மென் திறன்கள்" "சிறந்த பெறுபேறுகளுக்கான குழு முயற்சி" இரண்டு பயிச்சிகள் KTP Consultancy & Trainning நிறுவனத்தின் தனிநபர் சமூகப் பொறுப்புணர்வு (PSR - Personal Social Responsiblity) வழங்கப்பட்டன .

 

 

 

















 Dr.துரைராஜா பிரஷாந்தன்

 அம்பாறை மாவட்டம்  "விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பு" க்கான KTP Consultancy & Training நிறுவனத்தின் இரண்டாவது  பயிற்சி KTPஇன் 592வது மற்றும் 593வது தொழின்முறைப்  பயிற்சிகளை KTP நிறுவுனரும்  பெருநிறுவனப் பயிற்றுவிப்பாளருமான  Dr.துரைராஜா பிரஷாந்தன் அவர்கள் அம்பாறை திருக்கோவில் தாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் 2024 மார்ச் 7ம் திகதி மிகச்சிறப்பாக வழங்கினார்.

 "வெற்றிக்கான மென் திறன்கள்" (Soft Skills for Success - S3) எனும் தலைப்பில்  தரம் 10 - 13  மாணவர்களுக்கும் "சிறந்த பெறுபேறுகளுக்கான குழு முயற்சி" (Team Effort for Better Results - TEBR) எனும் தலைப்பில் ஆசிரியர்களுக்கும் பங்குபற்றல் அணுகுமுறையில் (Participatory Approach) சுய ஊக்குவிப்புப் பயிற்சிகளை நடத்தினார்.

இவ்விரு இலவசப் பயிற்சிகளும்  KTP Consultancy & Trainning நிறுவனத்தின் தனிநபர் சமூகப் பொறுப்புணர்வு (PSR - Personal Social Responsiblity) நடவடிக்கைகளாக வழங்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.

சாட்டுக்களைச் சொல்லி வளவாய்ப்புக்களைத் தட்டிக்கழிக்காது தொலைநோக்குப் புத்தாக்கத் தலைமைத்துவத்துடன் செயற்பட்ட அனைவரினதும் உயர் பண்புகள்  பாராட்டி  வரவேற்கப்பட்டன .
பல பாடசாலைகள்  பயிற்சிகளை வேண்டினாலும் அனுசரணைகள் பெரிதும் அவசரமாய் அவசியமாய் தேவை இருப்பதால் சமூக நலன்விரும்பிகளின்   அனுசரணை  வரவேற்கப்படுகின்றன.

 . நல்லுள்ளங்கள் அனுசரணைத் தொடர்புகளுக்கு +94715650258