கொழும்பு மற்றும் அதன் புறநகர்பகுதிகளில் McDonald’s வர்த்தக
நாமத்தின் கீழ் இயங்கி வரும் 12 உணவகங்கள் இயங்குவதற்கு தடை விதித்து
கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவர்களது உடன்படிக்கைகளில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் ஆதார நிறுவனம் முறைப்பாடு செய்ததை அடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
McDonald’s உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடக பாவனையாளர்கள் பலரும் பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.