வாழைச்சேனை இந்துக் கல்லூரி தேசிய பாடசாலையில் KTP Consultancy & Traininng நிறுவனத்தின் நிறுவுனர் Dr.K.T.Prashanthan அவர்கள் தலைமையில் வெற்றிக்கான மென் திறன்கள் செயலமர்வு நடை பெற்றது. .

 

 








Dr.K.T.Prashanthan

 வாழைச்சேனை  இந்துக் கல்லூரி தேசிய பாடசாலையில் 2025 & 2024 அணி மாணவர்களுக்கு Rotary Club of Batticaloa Heritage (RCBH) ஏற்பாட்டிலும் அனுசரணையிலும் "வெற்றிக்கான மென் திறன்கள்" (Soft Skills for Success - S3) எனும் தலைப்பிலான தொழில்வாண்மைத்துவ சுய ஊக்குவிப்புப் பயிற்சி 11/3/2024 இல் நடைபெற்றது .

தமது 596வது பயிற்சியாக இதனை இலாப நோக்கற்ற அடிப்படையில்(Not-for-Profit basis) KTP Consultancy & Traininng  நிறுவனத்தின் நிறுவுனர் Dr.K.T.Prashanthan அவர்கள் வளவாளராக வழங்கினார்.

கல்லூரியின்  அதிபர் திரு.A.குமணன் அவர்கள்  தலைமையில்  RCBH நடத்திய இச் செயலமர்வில் RCBH உறுப்பினர்களான Rtn S.ஹரிபிரசாத், Rtn.G.D.நிர்மல்ராஜ்,Rtn K.நவநீதன் ஆகியோரும் சுமார் 85  மாணவர்களும் கலந்து கொண்டனர்.

சாட்டுக்களைச் சொல்லி வளவாய்ப்புக்களைத் தட்டிக்கழிக்காது தொலைநோக்குப் புத்தாக்கத் தலைமைத்துவத்துடன் செயற்பட்ட அனைவரினதும் உயர் பண்பு பாராட்டுக்குரியது. என  நிறுவுனர் Dr.K.T.Prashanthan  வாழ்த்துக்களை தெரிவித்தார்

தேர்ந்தெடுத்த மாணவர்களுக்குக் கற்றல் உபரணங்களையும் Rotary Club of Batticaloa Heritage (RCBH) அமைப்பினர் வழங்கினர்.

RCBH மாவட்ட மானியத்தின் (District Grant) செயற்றிட்டமாக மொத்தம் ஐந்து பாடசாலைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது .