FREELANCER
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை நடத்திய "பட்டிமன்றமும் பாராட்டும்" நிகழ்வில் கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் 135 ஆவது சிறப்புச் செயலூக்கப் பட்டிமன்றமும், கதிரவன் பட்டிமன்றப் பேரவையினருக் கான பாராட்டும் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் செல்லத்தம்பி கலையரசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு வீதி அபிவிருத்தி, காணி அபிவிருத்தி, வீடமைப்பு, போக்குவரத்து அதிகார சபை, வீதிப்பாதுகாப்பு, நீர்ப்பாசனம், மனிதவலு அபிவிருத்தி, பெண்கள் விவகாரம் மற்றும் நீர் வழங்கல் வடிகால மைப்பு அமைச்சின் செயலாளர் திரு மூ.கோபாலரெத்தினம் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்து இருந்தார். சிறப்பான வரவேற்பு நடனத்தோடு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில், "மாணவர்களின் முன்னேற்றத் தில் மாணவர்களின் பங்களிப்பு போதும்- போதாது" எனும் தலைப்பிலான செயலூக்கச் சிறப்புப் பட்டிமன்றம் இடம் பெற்றது.
பாராட்டி விருது வழங்கும் நிகழ்வில் கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் தலைவர் கதிரவன் த. இன்பராசா அவர்களுக்கு "பட்டிமன்றப் பேராசிரியர்" எனும் பட்டம் வழங்கி சிறப்பு செய்யப்பெற்றதோடு, பட்டிமன்ற பேச்சாளர்களான கவிஞர் அ. அன்பழகன் குரூஸ் (ஆலோசகர், கதிரவன் பட்டிமன்றப் பேரவை), கவிஞர் அழகுதனு (செயலாளர், கதிரவன் பட்டிமன்றப் பேரவை), மட்டுநகர் சிவ வரதகரன் (பொருளாளர், கதிரவன் பட்டிமன்றப் பேரவை), சோலையூரான் ஆ. தனுஷ்கரன் (உப தலைவர் கதிரவன் பட்டிமன்றப் பேரவை) ஆகியோர் "சொல் வேந்தன்" எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப் பெற்றனர். பாடசாலை சமூகத்தினர் முதன்மை விருந்தினரை வெகுவாகப் பாராட்டிக் கௌரவித்தமை விசேட அம்சமாகும்.
தொடர்ந்து நான்கு வயதில் இரண்டு உலக சாதனைகள் படைத்த
(4 வயதில் A.தொடக்கம் Z வரை இரண்டு கைகளாலும் குறுகிய நேரத்தில் எழுதி இரண்டு உலகசதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக jackhi book of world record 3:30 நிமிடங்களிலும் இரண்டாவதாக அதனை முறியடித்து Netaji world record 2.38 நிமிடங்களிலும் எழுதி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது) தற்போது உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் தரம் : 01 இல் கல்வி கற்கும் செல்வி ஜ. கிரண்யாஸ்ரீ எனும் மாணவியும், அவரின் தந்தை ஜனா சுகிர்தன் மரசிற்ப கலைத்துறையில் சாதனை படைத்ததற்காகவும், மரத்தில் செதுக்கப்பட்ட பாடசாலையின் இலச்சினையை பாடசாலைக்காக அன்பளிப்பு செய்தமைக்காகவும், மென்மேலும் அவரின் கலைத்துறை வளர்வதற்காகவும் கௌரவம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.