ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக
மாற்றுவது குறித்து இன்று (08) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்
கவனத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.
ஏப்ரல் 14 ஆம் திகதி புத்தாண்டு உதயமாகும் நிலையில், ஏப்ரல் 15 ஆம் திகதி திங்கட்கிழமை வழக்கமான வேலை நாளாக காணப்படுகிறது.
எனினும் எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக
மாற்றுமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் இதுவரை இறுதித்
தீர்மானம் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு விடுமுறை தினமாக மாற்ற வேண்டுமாயின் அமைச்சரவை தீர்மானம் தேவை என
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று பிற்பகல் கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.