நாளை (1) மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையிடம் 1500 பஸ்களை அரசியல் கட்சிகள் கோரியுள்ள நிலையில் நேற்று (29ம் திகதி) மாலை வரை 200 பஸ்களுக்கு மாத்திரமே பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெரும்பாலும் பேருந்துகளை கோரியுள்ளன.
இலங்கை போக்குவரத்துச் சபையின் 107 டிப்போக்களின் கீழ் நான்காயிரத்து எழுநூறு பேருந்துகள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரத்து ஐநூறு பேருந்துகளுக்கான கோரிக்கை கிடைத்துள்ளது. இந்த பஸ்களை வழங்கும்போது, அரசு சுற்றறிக்கையின்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும்.