(கல்லடி செய்தியாளர் & பிரதான செய்தியாளர்)
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 16 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சித்திரை
புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று
காலை 10 மணியளவில் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 16 கைதிகள் விடுதலை
செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் முன்னிலையில் குறித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.