கதிரவெளி பிரதேச வைத்திய சாலையின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது- 2024.04.10




























FREELANCER

கதிரவெளி  பிரதேச வைத்திய சாலையின் ஏற்பாட்டில் வைத்திய சாலை பொறுப்பு வைத்திய அதிகாரி  ஜோசப் பீ்ற்றர் நிரோஜன் அவர்களின் ஒழுங்குபடுத்துதலின் கீழ்    பிரதேச வைத்திய சாலையில் இன்று 2024.04.10 காலை   இரத்த தான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில்  இரத்த  பற்றாக்குறையை    நிவர்த்தி செய்யும் பொருட்டு இவ் இரத்த தான முகாம்  இடம் பெற்றது ..
இவ் இரத்த தான  முகாமில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி உத்தியோகத்தர்கள்   மற்றும்   தாதிய உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
.இதன்போது ஏராளமான  பிரதேச வாழ் பொதுமக்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள்    எனப்  பலர்     கலந்து கொண்டு ஆர்வத்துடன் குருதிக்கொடை வழங்கியிருந்தனர்.