மட்டக்களப்பு கல்லடி ஹரி சிறுவர் இல்லத்தில் இன்று உதவும் கரங்கள் அமைப்பினால் பாராட்டு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது -2024.04.11




































 

 

 

 FREELANCER

ஹரி இல்லத்தில் தரம் இரண்டில் இணைந்து  மட்டக்களப்பு  சிவானந்தா  வித்யாலயத்தில் கல்வி கற்று களனி பல்கலைக்கழகத்தில் மென்பொறியியல் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த வாகரை கதிரவெளியையைச் சேர்ந்த "ஞானசேகரன் மங்களன்" அவர்கள் உதவும் கரங்கள் அமைப்பினரால் இன்று  ஹரி இல்லத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டார்
 ஹரி இல்லத்   தலைவரும் , பிரபல சமூக சேவையாளருமான திரு ச சந்திரகுமார் அவர்களின் தலைமை இடம் பெற்ற பாராட்டு நிகழ்வில்  உதவும் கரங்கள் நிறுவனத்  தலைவரும்  சிரேஷ்ட விரிவுரையாளருமான   ச.ஜெயராஜா பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதிகளாக   கோட்டக்கல்வி அதிகாரி த. ராஜ் மோகன் . அவர்களும்  சைவ  மங்கையர் மன்ற தலைவியும் ஓய்வு பெற்று அதிபருமான திருமதி திலகவதி ஹரிதாஸ் அவர்களும் கல்லடி பேச்சி அம்மன் ஆலய    முகாமையாளர்  ந. ஹரிதாஸ் அவர்களும்  கலந்து கொண்டனர். உதவும் கரங்கள் அமைப்பின் முகாமையாளர்  புவிராஜன்  அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தார் , மேலும் சிறுவர் இல்ல மாணவர்களின் பெற்றோர்களும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்
.
 கடந்த 21 வருடங்களாக பல சவால்களுக்கு மத்தியில் இயங்கி வரும்  ஹரி  சிறுவர் இல்லத்தில்  தற்போது 50 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர் .
இதுவரை 25க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிச் சென்றுள்ளனர்... இந்நிலையில்  வாகரை கதிரவெளியில்    யுத்தத்தினால் தந்தையை இழந்த ஞானசேகரன் மங்களன் அவர்கள் தரம் இரண்டில்  சிவானந்தா பாடசாலையில் இணைந்து    தொடர்ந்து  கல்வி கற்று  உயர்தரத்தில் சித்தி அடைந்து  களனி   பல்கலைக்கழகத்தில்   மென்பொறியியல்  துறையை  பூர்த்தி செய்தமையை  பாராட்டி கௌரவிக்கும் முகமாக    உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர்  ச.ஜெயராஜா  மற்றும் அமைப்பின் குழுவினரும்  இணைந்து  ஹரி இல்லத்தில்  வைத்து பொன்னாடை அணிவித்து பரிசுப்பொருளும்  வழங்கி  மாணவர்களுக்கு முன்னுதாரணமாக  கௌரவிக்கப்பட்டார் .
அத்துடன் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஹரி இல்ல  தலைவர் திரு ச. சந்திரகுமார் அவர்களுக்கும்  பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர் .