மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் இன்று எதிர்வரும் சித்திரை புத்தாண்டை கொண்டாடும் வகையில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து பொதுமக்கள் நகர் பகுதிக்கு வந்து தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை உற்சாகத்துடன் கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது.
புதிய வருடத்திற்கான புத்தாடைகளை ஐதீக முறைப்படி கொள்வனவு செய்வ தற்கு சிறந்த நாளாக காணப்படும் வியாழக்கிழமை பல புடவை கடைகளில் காலை முதல் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அலை மோதுவதை காணக் கூடியதாக உள்ளது.
இதேவேளை தங்களுக்கு தேவையான அத்தியா வசிய பொருட்களை மட்டக்களப்பு பொதுச்சந்தையிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது
மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக் அமைவாக புத்தாண்டிக்காக நகருக்கு வரும் மக்களின் நலன் கருதி விசேட பாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட்டுள்ளததுடன் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது
கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது நாட்டின் சிறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாக இம்முறை மக்கள் உடுதுணி வகைகள் விலை குறைந்துள்ளதனால் தங்களது குடும்பங்களுக்கு தேவையான புத்தாடைகளை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது.
அரசாங்கத்தினால் ஏற்கனவே விடுமுறை நாளாக அறிவித்துள்ள படியினால் அரசாங்க ஊழியர்களும் பொதுமக்களும் மிகவும் உற்சாகமான முறையில் தங்களுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது.