கிழக்கு மாகாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான
மட்டக்களப்பு புளியந்தீவு ஆணைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வர தேவஸ்தான
வருடாந்த மகோத்சவத்தின் கொடியேற்ற திருவிழா இன்று பக்தி பூர்வமாக
இடம்பெற்றது ஆலய பிரதம குரு சிவஸ்ரீகணேச திவிசாந்த குழுக்கள் தலைமையில் ஆலய
பரிபாலன சபையின் ஏற்பாட்டில் இவ்வாலயத்தின் முதலாம் நாள் திருவிழாவான
கொடியேற்ற திருவிழா இன்று நண்பகல் இடம் பெற்றது
இன்றுகாலை மூலவ
மூர்த்தியான சித்தி விக்னேஸ்வரருக்கு விசேட அபிஷேக ங்கள் இடம் பெற்று வசந்த
மண்டப பூசையை தொடர்ந்து கொடிச்சீலை ஆலய பரிபாலன சபையினரால் கொடியேற்றும்
இடத்துக்கு கொண்டு வரப்பட்டு கொடிக்கம்பத்துக்கு விசேட பூஜைகள் இடம் பெற்று
நண்பகல் 12 மணியளவில் அரோகரா கோஷம் முழங்க மங்கள வாத்தியங்கள் ஒலிக்க
இவ்வருடத்திற்கான புளியந்தீவு ஆணைப்பந்தி சித்தி விக்னேஸ்வரர் தேவஸ்தான
வருடாந்த மகோத்சவத்தின் கொடியேற்ற திருவிழா பக்தி பூர்வமாக சிறப்பாக இடம்
பெற்றது
தொடர்ந்து பத்து நாட்கள் இடம்பெற உள்ள ஆலயத்தில் வருடாந்த
மகோத்சவத்தின் சிறப்பு திருவிழாவான திருவேட்டை திருவிழாவும் தேர்
திருவிழாவும் அன்று இடம்பெற உள்ளதுடன் இறுதித் திருவிழாவான தீர்த்தோசகத்
திருவிழா எதிர்வரும் 23.04.2024 அன்று மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர்
ஆலயத்தில் தீத்த உற்சவத்துடன் இனிதே நிறைவு பெற உள்ளது.