24 மணித்தியாலங்களில் தேசத்தில் இடம்பெற்ற 8 வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 


கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 8 வீதி விபத்துக்களில்   10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த 8 விபத்துக்களில் 5 விபத்துக்கள் வீதியில் வாகனம் சறுக்கிச் சென்றதன் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, சாரதிகளின் கவனக்குறைவால் பல வீதி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து விதிமுறைகளை சாரதிகள; உரிய முறையில் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.