தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.