நீரில் மூழ்கி நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"வழக்கமாக நாளாந்தம் இலங்கையில் இரண்டு அல்லது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். எங்களின் தகவல்களின்படி வருடாந்தம் 700 - 800 பேர் இவ்வாறு இறக்கின்றனர். பண்டிகை காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அறிமுகமில்லாத இடங்களில் குளிக்கும் போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார்.