படகு விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர்.


 

மொசாம்பிக் கடற்கரையில் இடம்பெற்ற படகு விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர்.

விபத்து ஏற்படும் போது படகில் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நம்புலா மாகாணத்தில் உள்ள ஒரு தீவு அருகே மீன்பிடிக் கப்ப
ல் மூழ்கியதாக கூறப்படுகிறது.

அதிக ஆட்களை அழைத்துச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.