சில மாவட்டங்களில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும்

 


வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,  சப்ரகமுவ,மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும்  மொனராகலை மாவட்டங்களிலும்  இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். 

சூரியனின் வடக்கு நோக்கியநகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் உடப்பு, ஆட்டிகம, பிதிவில்ல, வக்காமுன, நுவரகல மற்றும் ஏறாவூர்  போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. 

சப்ரகமுவ, மேல் மற்றும்  வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.  

மத்திய, சப்ரகமுவ மற்றும்  மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன்  காலி மற்றும் மாத்தறை  மாவட்டங்களின் சில இடங்களிலும்  காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.