மட்டக்களப்பு கல்லாற்று பாலத்தில் கோழி லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது

 


 




FREELANCER

 இன்று 2024.04.09 காலை மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலை வழியாக  விற்பனைக்காக    கோழிகளை ஏற்றிக்கொண்டு   பயணித்துக்கொண்டிருந்த  லொறி   ஒன்று கல்லாறு பாலத்தில் குடைசாய்ந்து   விபத்துக்குள்ளாகியதில்  லொறி    பலத்த  சேதமடைந்ததுடன்      கோழிகளும் வீதிகளில் வீசி எறியப்பட்டு  சிதறிக்கிடந்தன.
கோழி லொறியை   செலுத்திக்கொண்டிருந்த சாரதி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததே    இந்த விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது,      விபத்து சம்பந்தமான  விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .