சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் பின் தங்கிய பிரதேச மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் வகையில் மாவட்ட பிராந்திய சுகாதார சேவை அலுவலக த்தினால் அப்பகுதியில் கடமையாற்றும் அதிபர்கள் ஆசிரியர் களுக்கான ஒருநாள் தலைமைத்துவ பயிற்சி மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தில் அதன் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் நவோலோஜி தன் தலைமையில் இன்று இடம் பெற்றது.
இன்றைய இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாகவும் வளவாளர்களாகவும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் T. சத்தியமூர்த்தி மற்றும் அருட்தந்தை யோசுவா அடிகள் கலந்துகொண்டு இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கான பின்தங்கிய பிரதேச மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு வேண்டிய திட்டமிடல்கள் தலைமைத்துவம் வகித்தல் மற்றும் யுத்த காலத்தில் பொருளாதார நெருக்கடியான காலகட்டத்திலும் கூட வடக்கு மாகாணத்தில் எவ்வாறான கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது
குறித்தும் தற்போது போதைப்பொருள் பாவனையில் மாணவர் சமூகம் எதிர்நோக்கும் சுகாதார பிரச்சனைகள் சம்பந்தமாகவும் இன்றைய இந்த தலைமைத்துவ பயிற்சியில் விளக்கங்கள் வளவாளர்களால் வழங்கி வைக்கப்பட்டது இன்றைய இந்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை அலுவலக முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் வைத்தியர்கள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.