தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

 

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப காலம் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

2021 மற்றும் 2022  ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தமது விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்ய வேண்டுமாயின், ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் ஏப்ரல் 17 ஆம் திகதி நள்ளிரவு வரை மாத்திரம் அதற்கான அவகாசம் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.