கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் கரையோரப் பகுதியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது

 


கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானினால்  கிண்ணியா உப்பாறு தொடக்கம் கங்கை வரையிலான கரையோரப் பகுதியில் கரையோர நடைபாதை (Beach Walking Path - Kinniya) அமைப்பதற்கும் அதனுடன் இணைந்து அப்பிரதேச  சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேள்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் ஆராய்வதற்கு கிழக்கு ஆளுநர் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் உள்ளிட்ட குழுவினர்  அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்துள்ளனர் .

இதன்போது இத்திட்டம் விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதடற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும்  இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மது கனி, திட்டமிடல் பணிப்பாளர் பாயிஸ், காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளர் விமல்ராஜ், காணி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.