கொட்டியாரம் அபிவிருத்தி நிறுவன ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம்.

 




கொட்டியாரம் அபிவிருத்தி நிறுவன ஏற்பாட்டில்
 சர்வதேச மகளிர் தினம்
2024.03.31 ஆந் திகதி நடைபெற்றது

 திருமதி.ச.ஜெயமாலா அவர்களால் இந்த  நிகழ்வு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டது.
  கனவு மெய்ப்படுகின்றது என்ற    கருப்பொருளின் காரணஹர்த்தா மனித உரிமை செயற்பாட்டாளர், வாழ்க்கை மேம்பாட்டு பயிற்றுவிற்பாளர்  நளினி ரத்ன ராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு மகளிர் தினத்தின் உண்மையான நோக்கம் என்பது என்ன என்பதை பற்றியும் ஒரு சிறப்புரையாற்றினார்.  அத்தோடு பிரதேச சபை செயலாளர் திருமதி.வீ.சத்தியசோதி
* கிண்ணியா நகரசபை நிர்வாக உத்தியோகத்தர் திருமதி. . வினோதினி
* ஓய்வுநிலை அதிபர் திருமதி . உமா ரதீஸ்பரன் ஆகியோரும் மேலும் பல முக்கியஸ்தர்களும்  கலந்துகொண்டு நிகழ்வை மெருகு ஊட்டியிருந்தனர்  
 இளவயது திருமணம் தவறு என்ற கருப்பொருளில்  விழிப்புணர்வு  நாடகம், நாட்டியம் போன்றவை இளம் சமூகத்தினரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது,   குறிப்பாக இந்த நிகழ்வு எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் நிதி உதவியும்   மக்களின் பங்களிப்புடன் நடைபெற்றது. இந்த நிகழ்வை அழகாக மெருகுபடுத்தி தொகுத்து வழங்கியவர் சட்டத்துறையில் முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் மனோஜா  ரத்னகுமார்    ஆவார்.
 நம் சமூகத்தை நாங்கள் தான் கட்டி எழுப்ப வேண்டும் என்ற  எண்ணக்கருவை   தலைவர் ஜெயமாலா நடைமுறைப்படுத்தியது பெருமைக்குரிய விஷயம்,  நமது சமூகம் வெளிநாட்டு உதவிகளுக்காக கையேந்தி நிற்கும் ஒரு நிலையை காணக் கூடியதாக இருக்கின்றது  இது எங்களின் சுய கௌரவத்தை பாதிக்கும் ஒரு மனப்பாங்கு ஆகும்  , இப்படியான காலகட்டத்தில் ஜெயமாலா போன்றவர்கள் இவ்வாறான ஒரு பெரிய நிகழ்ச்சியை மக்களின் பங்களிப்போடு நடத்தி முடித்திருப்பது  தங்கள் கிராமத்தையம்  மக்களையும்   முன்னேற்ற வேண்டும் என்பதில் மக்கள்    ஆர்வம் கொண்டிருப்பதை  எடுத்துக்காட்டுகின்றது.