ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பில் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்க விரும்பவில்லை- முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

 


ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பில் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்க விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாளிகாகந்த நீதவான் லொச்சனி அபேவிக்ரம வீரசிங்கவிடம் இன்று (03) தெரிவித்தார்.

  சட்டத்தரணி சந்தீப்த சூரியஆராச்சியின் பிரேரணைக்கு அமைய இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஜனாதிபதி சட்டத்தரணி  அனுஜ பிரேமரத்னவிடம் இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.