ஜப்பானின் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணிக்கு தாய்வான் அருகே 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) தெரிவித்துள்ளது.
ஒகினாவா தீவு, மியாகோஜிமா தீவு மற்றும் யேயாமா தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், 3 மீட்டர் (9.8 அடி) உயரம் வரை அலைகள் எழும் என்றுன் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“சுனாமி அலைகள் கடற்கரையை நெருங்கி வருகின்றன. முடிந்தவரை விரைவாக வெளியேறவும். அலைகள் மீண்டும் மீண்டும் அடிக்கலாம். அனைத்து எச்சரிக்கைகளும் நீக்கப்படும் வரை தொடர்ந்து வெளியேறவும்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாய்வானில், நிலநடுக்கம் தீவு முழுவதும் உணரப்பட்டது, சில கட்டிடங்கள் அஸ்திவாரங்களை அசைத்து, தீவின் கிழக்குப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
தைபேயில், நிலநடுக்கத்தின் சக்தியால் புத்தக அலமாரிகள் மற்றும் தளபாடங்கள் இடிந்த நிலையில், வாகனங்கள் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டன. 15 நிமிடங்களுக்குப் பிறகு தலைநகரில் தொடர்ச்சியான நில அதிர்வுகள் உணரப்பட்டு அடுத்த ஒரு மணி நேரத்திற்கும் தொடர்ந்தன.
தாய்வான் அதிகாரிகள் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தனர், குடியிருப்பாளர்கள் “விழிப்புடன்” இருக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
கடலோரப் பகுதிகளில் “உயர்ந்த சுனாமி அலைகள்” ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிலிப்பைன்ஸின் நில அதிர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.