இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைதாகிப் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முருகன், ரொபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இன்று முற்பகல் 11.30 மணிக்கு இவர்கள் மூவரும் வந்தடைவார்கள் என்று முருகன் சார்பில் வழக்காடிய சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில் சிறையில் இருந்த இவர்கள் 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில், அவர்களை விரைவில் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், மூவரும் இன்று இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.