(கல்லடி செய்தியாளர்)
இலங்கை இராணுவத்தினரால் மட்டக்களப்பு காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்ட வீடு செவ்வாய்க்கிழமை (02) மாலை திறந்து வைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் 11 ஆம் சிங்க ரெஜிமன்ட் படை அணியின் கட்டளை யிடும் அதிகாரி மேஜர் டி .எம் .என். பத்ம சிறீயின் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் இராணுவ வீரர்களின் பங்களிப்பில் 243 ஆவது காலாட்படை அணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கே .எம். எஸ். குமாரசிங்கவின் அழைப்பின் பேரில் 24 ஆவது காலாட் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் டபிள்யூ சந்திர ஸ்ரீயினால் இந்த வீடு திறந்து வைக்கப்பட்டது.
சமயத் தலைவர்களின் பிரார்த்தனைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து குறித்த வீடு திறந்து வைக்கப்பட்டு வீட்டின் பயனாளிடம் கையளிக்கப்பட்டது.
இந்த வீடு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி 167ஏ. வடக்கு கிராம சேவகர் பிரிவில் எம்.ஐ.மசாகிரா என்பவருக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 45 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீட்டின் நிர்மாணப் பணிகளை மிகவும் துரிதமாகவும், விரைவாகவும் இராணுவத்தினர் மேற்கொண்டிருந்தனர்.
இந்த வீட்டினைக் கையளிக்கும் நிகழ்வில் காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம். பரீட் உட்பட முக்கியஸ்தர்கள், இராணுவ அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.