சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டம் ஏற்கனவே நிதியமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தனது அமைச்சின் கீழ் குறுகிய பயிற்சி மற்றும் பரீட்சை மூலம் சான்றிதழ்கள் பெறாத தொழில் வல்லுநர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.