அண்மையில் கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல் இலங்கையில் உள்்ள இணைய இணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதை அடையாளம் காண உள்நாட்டு சேவை வழங்குனர்களிடம் தகவல் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை சைபர் தாக்குதலுக்கு உள்ளான கல்வி அமைச்சின் இணையத்தளம் தொடர்ந்தும் செயலிழந்துள்ளது.
இது தொடர்பான அனைத்து விபரங்களும் அடங்கிய அறிக்கை இன்று கல்வி அமைச்சிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.