மாமியாரை கொலை செய்த மருமகன் .

 

மொனராகலை நக்கல பலம ஹந்திய பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மருமகன் கத்தியால் தாக்கியதில் மாமியார் உயிரிழந்துள்ளார். மனைவியும் காயமடைந்துள்ளார் என மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நக்கல பகுதியைச் சேர்ந்த சேர்ந்த புஷ்பா குமாரி (வயது 44) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். 

குடும்பப் பிணக்குக் காரணமாக ஏற்பட்ட தகராறில் இந்தக் கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மருமகன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.