நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில், தேவைக்கேற்ப வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தேவைகளுக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிகளும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.