பட்டிப்பளை பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் இலவச மருத்துவ முகாம் ஒன்று மாவடிமுன்மாரி கிராம சேவகர் பிரிவில் முன்னெடுக்கப்பட்டது

 










 "நாடு தழுவிய ரீதியில் நோயாளர்கள் பராமரிப்பு" எனும் தொனிப்பொருளில் பொது மக்களின் நன்மை கருதி
மண்முனை தென்மேற்கு , பட்டிப்பளை பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நடாத்திய இலவச மருத்துவ முகாம் (2024.04.05 ) மாவடிமுன்மாரி கிராம சேவகர் பிரிவில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மகிழடிதீவு வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் வைத்திய குழுவினரும் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு ஆயுள்வேத மருத்துவமனையின் வைத்தியர்களும் வைத்திய குழுவினரும் சிறப்பாக தங்கள் சேவையினை வழங்கியிருந்தனர்

இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் , முகாமைத்துவ பணிப்பாளர்,
சமூர்த்தி முகாமையாளர்கள் , மற்றும் உத்தியோகஸ்தர்கள், அதிகளவான பொது மக்களும் கலந்து கொண்டனர்.