வரதன்
அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களின் உணவு பாதுகாப்பை உறுதிப் படுத்தும் வகையில் பல்வேறு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சுகாதார அமைச்சினால் சகல பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஊடாக புத்தாண்டு காலத்தில் அதிகளவிலான மக்கள் நகருக்கு வரும் காரணத்தினால் இந்த சுகாதார விழிப்புணர்வு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது
இதேவேளை மட்டக்களப்பு சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாநகர சபை பகுதிக்கு உட்பட்ட உணவகங்களில் வெதுபகங்கள் உணவு விடுதிகள் உணவு வகைகளை கையாளும் போது இது பொது மக்களுக்கு திருப்திகரமான சேவையினை வழங்குகின்றதா என்பதை உறுதிப்படுத்தும் செயல்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் திணைக்கள மாவட்ட பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் நவோலோஜிதன் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது சுகாதாரத் தரப்பினார் சகல உணவங்களிலும் பொதுமக்களுக்கு நன்றாக தெரியக்கூடிய வகையில் புதிய தொலைபேசி கையடக்க whatsapp இலக்கத்தை தெரியப்படுத்துவதன் மூலம் நுகர்வோருக்கு இது சம்பந்தமாக குறைபாடுகள் ஏதும் இருப்பின் இதனை மாவட்ட தெரியப்படுத்துவதன் மூலம் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இத்திட்டம் முன்னெடுக்கப் பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட 150 கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர் மாவட்டத்தின் எதிர்கால உணவு பாதுகாப்பை முன்னிட்டு இந்த செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட 150 கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர் மாவட்டத்தின் எதிர்கால உணவு பாதுகாப்பை முன்னிட்டு இந்த செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்றைய இந்த ஆரம்ப நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை அலுவலக முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் முன்னாள் கலந்து கொண்டதுடன் உணவாக உரிமையாளர்களுக்கான உணவு பாதுகாப்பு சம்பந்தமான விளக்கங்களையும் வழங்கி வைத்தார்.மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் திணைக்களத்தின் வைத்தியர்கள் உயர் அதிகாரிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.