மழை பெய்யும் வேளையில் பலத்த மின்னல் ஏற்படக்கூடிய அபாயம்

 


மழையுடன் ஏற்படக்கூடிய பலத்த மின்னல் தாக்கங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும்  இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழை பெய்யும் வேளையில் பலத்த மின்னல் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.