மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் (களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் இரண்டாவது நாளாகவும் 03.04.202 பாடசாலைக்குச் செல்லாமல் அனைவரும் சுகயீன விடுமுறை என அதிபருக்கு தந்தி மூலம் அறிவித்துவிட்டு பாடசாலை வாயிற் கதவு முன்னால் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலையின் தேவையற்ற அறம் இல்லாத தலையீட்டினை உடன் நிறுத்துங்கள், எமது
பாடசாலை ஒழுங்கான முறையில் இயங்குவதனை தடுக்காதே, வலயக்கல்வி அலுவலகத்தின்
நீதியற்ற ஆசிரியர் இடமாற்றத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம், 300
மாணவர்களைக் கொண்ட பாடசாலையும், 3000 மாணவர்களைக் கொண்ட பாடசாலையும் சமமா?
வலயக் கல்விப் பணிப்பாளரே நிதியற்ற நிருவாக தலையீ
ட்டினை பாடசாலையின் மீது திணிக்காதே போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்கார்களான ஆசிரியர்கள் தமது கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இதன்போது குறித்த பாடசாலைக்கு அதிபர் மாத்திரமே சமூகம் கொடுத்திருந்த போதிலும் பாடசாலையில் கல்வி பயிலும் 3000 மாணவர்களையும் குறித்த அதிபர் மாத்திரமே நிருவகித்திருந்தார். எனினும் பாடசாலையில் எதுவித கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் இடம்பெற்றிருக்கவில்லை.
இதன்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன், பழையமாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பெற்றோர்கள் என பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
பின்னர் பாடசாலை அதிபர், பழையமாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கிராம பெரியோர்கள் உள்ளிட்ட குழுவினர் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் காரியாலயம் சென்று போச்சுவார்தையில் ஈடுபட்டனர். அதில் பாடசாலை நிருவாகம் கோட்டுக் கொள்ளும் அனைத்து விடையங்களையும் தான் செய்து வருவதாக இதன்போது வலயக்கல்விப் பணிப்பானர் சி.சிறிதரன தெரிவித்திருந்தர்.
எனினும் வலயக் கல்விப் பணிப்பாளரின் கருத்துக்கள் தமக்குத் திருப்தியளிக்கவில்லை எனவும், பாசாலையின் ஆசிரியர்கள் முன்வைக்கும் இடமாற்றம், வளப்பற்றாக்குறை, உள்ளிட்ட பல விடையங்களையும் தாங்கள் முன்னின்று நிறைவேற்றித் தருவதாக பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரும், இணைந்து முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க அதனை ஆர்;ப்பாட்டம் நடாத்திய ஆசிரியர்கள் ஏற்று ஆர்ப்பாட்டத்தை இன்று இடைநிறுத்தி புதன்கிழமையிலிருந்து வழமைபோன்று ஆசிரியர்கள் பாடசாலையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக பழையமாணவர் சங்கத்தின் செயலாளர் எஸ்.சுரேஸ்குமார் தெரிவித்தார்.
இது இவ்வாறு இருக்க பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் (களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலையிலிருந்து தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு அதே கல்வி வலயத்திலுள் முனைத்தீவு சக்தி மகாவித்தியாலயத்திற்கு மாற்றப்பட்டிருந்த தகவல் தொழில் நுட்ப பாடத்திற்கான ஆசிரியரின் இடமாற்றத்தையும் வலயக் கல்விப் பணிப்பானர் இரத்துச் செய்து மீண்டும் பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயத்தில் அவர் தொடர்ந்து கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.