எத்தேர்தல் வந்தாலும் மக்களின் நலன் கருதி எமது முடிவுகளை எடுப்போம் -சி. சந்திரகாந்தன்

 


 வரதன்

கடந்த காலங்களில் பொதுஜன பெரமுன  கட்சியுடன் இணைந்து அரசியல் செய்தவர்கள் என்ற வகையில் எதிர்காலத்தில் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்கள்  எத்தேர்தல் வந்தாலும் மக்களின் நலன் கருதி எமது முடிவுகளை எடுப்போம் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தன்
கடந்த காலங்களில் பொதுஜன பெரமுன  கட்சியுடன் இணைந்து அரசியல் செய்தவர்கள் என்ற வகையில் நட்பு ரீதியில் பழகியவர்கள் அரசியலில் எதிர்காலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வர்களாக அவர்களை அவதானிக்கின்றோம் நமது கட்சியானது பிராந்திய ரீதியில் அரசியல் பணிகளை முன்னெடுக்கும் கட்சி என்ற வகையில் எமது முடிவுகளை மக்களின் நலன் கருதி எடுப்போம்

என்னைப் பொறுத்த வரையில் ஜனாதிபதி தேர்தல் தான் முதலில் வரும் அதன் பின்னர் பாராளுமன்ற பொது தேர்தல் இடம் பெறும்  சில நேரங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் பொது மக்களின் நலனில் அக்கறையுள்ள கட்சி என்ற வகையில் எதிர்வரும் காலங்களில் ஏத்தேர்தல் வந்தாலும் தாம் சந்திக்க தயாராக உள்ளதாகவும் இலங்கை வரலாற்றில் நம்பிக்கையுடன் வந்த ஜனாதிபதி தோற்று வெளியேறினார் என்பது முக்கியமான அடையாளமாக பதியப்பட்டுள்ளது

பாராளுமன்றத்தில் எவ்வாறான குழப்பங்கள் வந்தாலும் வராமல்  போனாலும் அவ்வாறான நிலைமைகள் வரும்போது தாம் சந்திக்க தயாராக உள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ராஜாங்க அமைச்சரு மான சிவனேசத்துரை சந்திரகாந்தன் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்தை தெரிவித்தார்.