"மட்டு முயற்சியான்மை 2024" எனும் கண்காட்சியும் விற்பனையும் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

 

 






































வரதன் 

கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில்  சிறு தொழில் முயற்சியாளர் களின் வாழ்வாதாரத்தினை கட்டி எழுப்பும் நோக்குடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
 இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் பிரதேச மட்ட சுய தொழில் முயற்சியாலர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக இன்று மண்மனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலகத்தின் சிறுதொயில் முயற்சி அபிவிருத்தி  பிரிவின் ஏற்பாட்டில் "மட்டு முயற்சியான்மை" எனும் கண்காட்சியும் விற்பனையும் இன்று காலை தொடக்கம் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது. மண்மனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன் தலைமையில் இக்கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஏராளமான பொதுமக்கள் கண் காட்சியை பார்வையிட வந்ததுடன் பொருட்களையும் ஆர்வத்துடன் வாங்கிகிச்சென்றனர் .