கோழி இறைச்சியின் விலையை வர்த்தகர்கள் தன்னிச்சையாக உயர்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .?

 


பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில் வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும் அவ்வாறான நிலைமை சந்தையில் காணப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையை வர்த்தகர்கள் தன்னிச்சையாக உயர்த்தி வருவதாகவும் சந்தையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் நுகர்வோர் குற்றஞ் சுமத்துகின்றனர்.

முன்னதாக ஒரு கிலோகிராம் கோழியிறைச்சி 1,100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,400 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முட்டை ஒன்றின் விலை 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தையடுத்து முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.