போதையற்ற நாடு சௌபாக்கியமான தேசம் எனும் தொனிப்பொருளில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கி வைப்பு



வரதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் "யுத்திய மெஹெயும" விஷேட போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர் தொடர்பான துண்டுப்பிரசுரம் வழங்கி வைக்கப்பட்டது.

 மட்டக்களப்பு நகர் பகுதியில்  போதைப்பொருள் தடுப்பு துண்டு ப்பிரசுரம் கிழக்கு மாகாண புனர்வாழ்வு பொறுப்பதிகாரி கேணல் சனத் அபே திலக்க தலைமையில்  நடைபெற்றது.கிழக்கு மாகாண புனர்வாழ்வு  நிலையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இன்று  இவ் நிகழ்வு இடம்பெற்றது.  

போதையற்ற நாடு சௌபாக்கியமான தேசம் எனும் தொனிப்பொருளில் பாதசாரிகள் மற்றும் வீதியில் செல்லும் வாகனங்களில் ஸ்டிக்கர் காட்சிப்படுத்தல் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

போதைப்பொருள் தடுப்பு மட்டக்களப்பு  மாவட்ட இணைப்பாளர் ப.தினேஸ், புனர்வாழ்வு பணியக உத்தியோகததர்கள், மாவட்ட செயலக போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் வி.ஜெகன் என பலர்  பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.