அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய மே தின கூட்டத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் பாடுவதற்காக இந்தியாவிலிருந்து பாடகர்கள் குழுவொன்று செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
விஜய் பாலகிருஷ்ணன், ரம்யா நாகர்கோவில், டேனியல் ஜெயராம், ரேஷ்மா சுந்தரம் ஆகிய பாடகர்களே இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
இந்த இசை நிகழ்ச்சி மாளிகாவத்தை, பி.டி .சிரிசேன விளையாட்டு மைதானத்தில் மே 01 ஆம் திகதி நடைபெறவுள்ளது .
மேலும் , இந்திய இசைக்கலைஞர்களான சத்ய பிரகாஷ் தர்மர் மற்றும் நூராணி
வஷர் ஆகியோரும் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக இலங்கைக்கு
வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.