FREELANCER
அகில இலங்கை ரீதியாக 72 தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து தேந்தெடுக்கப்பட்ட 10 பத்து வைத்திய சாலைகளில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .
அந்த வகையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை ஊழியர்களினால் நான்கு மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று ஈடு பட்டர்கள் .
வாக்குறுதி அளிக்கப்பட பத்து நாட்கள் முடிவடைந்த நிலையில்28-03-2024 முதல் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தன ,திட்ட மிட்டபடி 01.04.2024 அன்று பணிப்புறக்கணிப்பு இடம் பெற்றதோடு
நியாயமான தீர்வு வழங்கப்படாவிட்டால் 02.04.2024 முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர் .