மட்/பட் உதயபரம் தமிழ் வித்தியாலயதிற்கு புனரமைக்கப்பட்ட கட்டிடம் கையளிக்கப்பட்டது.

 

 















 மட்/பட் உதயபரம் தமிழ் வித்தியாலயத்தில் மேற்படி நிகழ்வானது பாடசாலையின்
அதிபர் கோகுலராஜ் தலைமையில் வெகு விமர்சையாக இடம் பெற்றது.
இதில் அமெரிக்காவில் இருந்து வருகை தந்த I M H O  நிறுவனத்தின்
பணிப்பாளர் திருமதி ராஜம் அம்மணி அவர்கள் கலந்து கொண்டதுடன்
அவர்களினால் I M H O  நிறுவனத்தினால் புணரமைக்கப்பட்ட கணனிக்கூடம்
திறந்து வைக்கப்பட்டதுடன் ஆறு கணனிகள் கையளிக்கப்பட்டது மேலும் சிறுவர்
பூங்கா ஏழு கட்டிடங்களின் கூரை மற்றும் ஆண் பெண் மலசலகூடங்கள்
புணரமைக்கப்பட்டதுடன் விளையாட்டு உபகரணங்களும் கையளிக்கப்பட்டது
இன் நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள்  I M H O  நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் கலந்து சிறப்பித்தனர் அதிபர்
அசிரியர்களினால் கௌரவத்திற்குரிய பணிப்பானர் ராஜம் அம்மணி அவர்கள்
பொன்னாடை போர்த்தி கௌhரவிக்கப்பட்டதுடன் தொடர்ந்து பேசிய
I M H O  நிறுவனத்தின் பணிப்பாளர் தங்களால் வழங்கப்பட்ட உதவிகளை உரிய
வகையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றதுடன் சமூதாயத்தின் வளர்ச்சி என்பது
கல்வி என்றதுடன் தமது நிறுவனத்திற்கு உதவிகளை வழங்கிவரும் அமெரிக்க
தமிழர்களுக்கு விஷேட நன்றிகளை தெரிவித்தார்.