தான் தொடர்ந்தும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியலில் இருந்து விலகும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் பல அரசியல்வாதிகள் தன்னை சந்தித்து நலம் விசாரிக்க வருவதாகவும் அவர் கூறுகிறார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன -பெரமுனா அல்லது வேறு எந்தக் கட்சியிலிருந்தும் யாரும் தம்மை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகக் கேட்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.