களுவாஞ்சிகுடி தபாலகத்தினால் விற்பனை மேம்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

 

 





களுவாஞ்சிகுடி தபாலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விற்பனை மேம்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்   தபாலதிபர் வ.மனோகரன்  தலைமையில் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் சோ.ஜெகன்  ஆலோசனைக்கு அமைவாக  தபாலக,உபதபாலக உத்தயோகத்தர்கள்,ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று  சிறப்பாக   இடம்பெற்றது. 

இந்நிகழ்வு களுவாஞ்சிகுடி தபாலகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு களுவாஞ்சிக்குடி நகர் மற்றும் சந்தை தொகுதி வரை சென்று மீண்டும் தபாலகத்தை வந்தடைந்தது இத் திட்டத்தின் மூலம் தபால் திணைக்கள சேவைகள் தொடர்பாக மக்களிடையே தெளிவூட்டப்பட்டது.இந் நிகழ்வினை ஏற்பாடு செய்த மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர்  நன்றியை தபாலகம் சார்பாக  தெரிவித்துள்ளனர்