தமிழ் மக்களைக் கேடயமாகப் பாவித்து அரசியலில் ஈடுபட தமக்கு விருப்பம் இல்லை- டக்ளஸ் தேவானந்தா

 


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தீவிர அரசியலில் இருந்து விலகவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பல இடையூறுகளுக்கு மத்தியில் அரசியலில் பிரவேசித்த தமது நோக்கம் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை இயன்றவரை உயர்த்துவதே எனவும் அதற்காக இயன்றளவு சேவைகளை செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களைக் கேடயமாகப் பாவித்து அரசியலில் ஈடுபட தமக்கு விருப்பம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலிலேயே அரசியலில் இருந்து விலக நினைத்தேன் என்றும், தான் தொடங்கிய திட்டங்களால் அந்தத் தேர்தலில் போட்டியிட்டதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், தற்போது வயோதிகமாக உள்ளதால், உடல் பலவீனமாக இருப்பதாக கருதுவதால், எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.