சுதந்திரமாக ஜனநாயக காற்றை சுவாசிக்க கூடிய அளவுக்கு நிலைமைகளை கொண்டு வந்த ஜனாதிபதி ரனில் விக்ரம சிங்கவின் வெற்றியில் நாமும் பங்கெடுத்து அபிவிருத்திகளை எமது பகுதிகளுக்கு கொண்டு வருவதையே நாம் நோக்கமாக செயல்பட வேண்டும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்பது சர்வதேசத்தின் பார்வையாக இருக்கின்றது - ஈழவர் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்) கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன்
நாட்டில் இடம்பெற்ற அறகளை ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு வரிசைகளை நிறுத்தி வெளிநாட்டு நிதியுதவிகளை கொண்டு வந்து பொருட்களின் விலைகள் கூடியிருந்தாலும் அதனை வாங்க கூடிய அளவுக்கு நிலைமைகளை மாற்றி இன்று சுதந்திரமாக ஜனநாயக காற்றை சுவாசிக்க கூடிய அளவுக்கு நிலைமை களை கொண்டு வந்த எமது ஜனாதிபதி ரனில் விக்ரம சிங்கத்துக்கு பாரிய அபித்தித் திட்டப் பணிகளை முன்னெடுப்பதற்கு காலம் காணாமல் உள்ள காரணத்தினால் நமது மக்கள் இன்னும் 5 வருடங்கள் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமே ஆனால் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்பது சர்வதேசத்தின் பார்வையாக இருக்கின்றது ஒரு வருடத்திற்கு முடியாத காரியங்கள் அனைத்தையும் செய்து காட்டி இருக்கிறார்
புதிய ஜனாதிபதி வேட்பாளர்களை தவிர்த்து அவருக்கு இன்னொரு ஐந்து வருட காலத்தை வழங்க வேண்டும் தமிழ் கட்சிகள் தற்போது பொது வேட்பாளர் என்ற பெயரில் அவர்களின் ஆசைகளையும் எண்ணங்களையும் கொச்சைப்படுத்தி வருகின்றனர் ஜனாதிபதி வேட்பாளர் என்பது ஒரு கணிசமான வாக்குகளை யாவது பெற வேண்டும் இலங்கையில் இருக்கின்ற தமிழ் பேசும் மக்களை கொச்சைப்படுத்த வேண்டாம் சிங்கள சமூகம் நிச்சயமாக ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்யத் தான் போகிறது - ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.